சத்ரபதி சிவாஜியும் மோடியும் ஒண்ணா? – சீறிய சிவசேனா, பதுங்கிய பாஜக!

செவ்வாய், 14 ஜனவரி 2020 (15:24 IST)
பாஜகவை சேர்ந்த ஒருவர் சத்ரபதி சிவாஜியையும், பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு எழுதியுள்ள புத்தகத்துக்கு சிவசேனாவினர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

பாஜக பிரமுகர் ஜெய் பகவான் என்பவர் சமீபத்தில் “இன்றைய சிவாஜி: நரேந்திர மோடி” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். சத்ரபதி சிவாஜியை நரேந்திர மோடியோடு ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ள இந்த புத்தகத்திற்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் ”சத்ரபதி சிவாஜியை யாருடனும் ஒப்பிட முடியாது. ஒரு சூரியன். ஒரு சந்திரன், அதுபோல ஒரு சத்திரபதி சிவாஜிதான்! இந்த புத்தகம் குறித்து மராட்டிய பாஜக அவர்களது நிலைபாட்டை விளக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

மேலும் ‘இந்த புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் உடனடியாக தடை செய்ய வேண்டும், இந்த புத்தகம் யாரிடமாவது இருப்பது தெரிந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்” என எச்சரித்துள்ளார். ஆனால் மராட்டிய பாஜகவோ அந்த புத்தகம் எழுத்தாளரின் கருத்துகளே, அதில் பாஜகவுக்கு சம்மந்தம் இல்லை என பின் வாங்கியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பயங்கரவாதிகளுக்கு உதவ 12 லட்சம் வாங்கினேன் – டிஎஸ்பி வாக்குமூலம்