தமிழகம், புதுச்சேரியில் வரும் 4 ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இதனிடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 3 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வரும் 3, 5 ஆம் தேதிகளில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தென்கடலோர மாவட்டங்கள் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் நாளை மறுநாள் கனமழை பெய்யும்.
வரும் 4 ஆம் தேதி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.