Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயக்குமார் கைது எதிராக தடையை மீறி ஆர்ப்பாட்டம்! – அதிமுகவினர் மீது வழக்கு!

Advertiesment
Tamilnadu
, செவ்வாய், 1 மார்ச் 2022 (10:32 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை எதிர்த்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நகர்புற உள்ளாட்சி தேர்தலின்போது திமுக தொண்டர் ஒருவரை தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர்மீது வேறு பல வழக்குகளும் தொடரப்பட்டுள்ள நிலையில் மார்ச் 9 வரை அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ஜெயக்குமார் கைதுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய 2,300 அதிமுகவினர் மீது சென்னை கடற்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாட்டிற்கு நீங்கள் தேவை..! – முதல்வரை வாழ்த்திய பிரதமர் மோடி!