Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுவது எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு.

Advertiesment
thangam thennarasu

Mahendran

, செவ்வாய், 22 ஏப்ரல் 2025 (10:53 IST)
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவோம் என திமுக தனது தேர்தல் அறிக்கைகள் கூறி ஆட்சிக்கு வந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக பலமுறை கோரிக்கை விடுத்தும் பழைய ஓய்வு திட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் தற்போது சட்டமன்றத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பழைய ஓய்வூதிய திட்டம் உரிய நேரத்தில் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்
 
பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில்  இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
 
இன்று  சட்டப்பேரவை காலை  9.30 மணிக்கு கூடியவுடன்  கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.இதனை அடுத்து கேள்வி நேரத்தின்போது, பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படுமா? என்று மதுராந்தகம் பேரவை உறுப்பினர் மரகதம் குமாரவேல் கேள்வி எழுப்பினார்.
 
இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ”அரசு ஊழியர்களின் நலனில் முதல்வர் ஸ்டாலின் அரசு  அக்கறையோடு செயல்பட்டு வருகிறது. அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் குறித்து ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வரிடம் பேசி உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமணத்திற்கு பிறகும் தனித்தனி கட்டில்.. இந்தியாவில் அதிகரிக்கும் ஸ்லீப் டைவர்ஸ்!