கோடை விடுமுறைக்கு பின்னர் தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பது எப்போது என்பது குறித்து அறிவிப்பை உயர்கல்வித்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது.
2025 - 26 ஆம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஜூன் 16ஆம் தேதி திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதேபோல் தமிழகத்திற்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்று அறிக்கையில் தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வு ஏப்ரல் 24ஆம் தேதி முடியும் நிலையில் 25ஆம் தேதி முதல் கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விடைத்தாள் திருத்தம் பணி, தேர்வு முடிவு வெளியிடும் பணி மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு 30ஆம் தேதி முதல் விடுமுறை என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது