இதுபோல் 1000 நண்பர்கள்...தனிமை என்பதே கிடையாது – ஹெச்.ராஜா கலக்கல் டுவீட்

புதன், 25 மார்ச் 2020 (20:30 IST)
இதுபோல் 1000 நண்பர்கள் இருக்கும் போது தனிமை என்பதே கிடையாது – ஹெச்.ராஜா கலக்கல் டுவீட்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் இதுவரை 4,22,759 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 18,902 பேர் உயிரிழந்துள்ளனர். கோவிட் என்ற கொரோனா வைரஸ் 200 நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா பாதிக்கபட்டவர்களில் 9,102 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய அளவில் சுமார் 3 லட்சம் பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இந்தியாவில் 519 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. 10 பேர் பலியாகியுள்ளனர். 40 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் நேற்று மாலை முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 8 மணிக்கு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வரும் என அறிவித்தார். 

அதன் படி இன்று முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று 20-க்கும் மேற்பட்டோருக்கு உள்ளது உறுதியாகியுள்ளது. 

இந்நிலையில்,  பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் இன்னமும் 20 நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டியுள்ளதால் நம் ஒவ்வொருவருக்கும் நம்மோடு இருக்கும் நண்பன் library தான். மாதிரிக்கு சில புத்தகங்கள் என்று ஒரு பதிவிட்டுள்ளார். நெட்டிசன்கள் அவரது டுவீட்டுக்கு ரீடுட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோல் 1000 நண்பர்கள் ( புத்தகங்கள்) இருக்கும் போது தனிமை என்பதே கிடையாது pic.twitter.com/6BvonMbVNk

— H Raja (@HRajaBJP) March 25, 2020

இன்னமும் 20 நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டியுள்ளதால் நம் ஒவ்வொருவருக்கும் நம்மோடு இருக்கும் நண்பன் library தான். மாதிரிக்கு சில புத்தகங்கள். pic.twitter.com/CxAOSGuSBu

— H Raja (@HRajaBJP) March 25, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஊரடங்கு உத்தரவின்போது மகளுக்கு திருமணம் நடத்திய ஓய்வு பெற்ற காவலர் கைது