தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து! ’’மாணவர்கள் ஆல் பாஸ் ‘’ முதல்வர் அறிவிப்பு

புதன், 25 மார்ச் 2020 (14:51 IST)
தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து! ’’மாணவர்கள் ஆல் பாஸ் ‘’ முதல்வர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரபரப்பு காரணமாக பள்ளிகள் அனைத்தும் கடந்த சில வாரங்களாக மூடப்பட்டிருப்பதால் எந்த வகுப்பிற்கும் இன்னும் முழு ஆண்டு தேர்வு நடத்தப்படவில்லை. இன்னும் 21 நாள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இனிமேலும் தேர்வுகள் நடத்த வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது. இன்று காலையில் புதுவையில் 1 முதல்  9வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,  தமிழ்நாட்டில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், 1 முதல் 9ஆம் வகுப்பு வரை  படிக்கும்  அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் 12ஆம் வகுப்பு தேர்வு எழுத இயலாத மாணவர்களுக்கான மறுதேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.   

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் இன்று மாலை முதல் தேநீர் கடைகளை மூட உத்தரவு !