Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? அன்புமணி கேள்வி..!

Advertiesment
மு.க.ஸ்டாலின்

Siva

, செவ்வாய், 12 ஆகஸ்ட் 2025 (12:36 IST)
மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
பழனி முருகன் கோயிலில் வழிபாடு நடத்தச் செல்லும் பக்தர்களிடம்  முருகப் பெருமான் வரலாறு என்று கூறி, ரூ.2700 விலை கொண்ட  முருகன் மாநாட்டு மலர் கட்டாயமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
 
அதைவிடக் கொடுமை என்னவென்றால், முருகன் வரலாறு என்று கூறி விற்பனை செய்யப்படும் நூலின் பெரும்பாலான பக்கங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோரின் கருத்துகளும்,  அவர்களின் புகைப்படங்களும் நிறைந்திருப்பது தான்.
 
முருகன் வரலாறு என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் புகழ் பாடப்படுவதைக் காணும் போது  மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? என்ற வினா எழுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
 
அய்யோ பாவம்...  திராவிட ஆட்சியாளர்களின் அகராதியில்  ‘ஆண்டவர்’களை ஆள்பவர்களே  உயர்ந்தவர்கள்  என்று எழுதப்பட்டிருப்பது அவர்களுக்கு தெரியாது.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுரையில, நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்ப்போம்: விஜய்