தினகரன் அணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கப்பட்ட நிலையில் 18 எம்.எல்.ஏக்களும் நீதிமன்றம் சென்றது குறித்து அனைவரும் அறிந்ததே. இந்த வழக்கு முடியும் வரை 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் அமலில் இருக்கும் என்பதால் அவர்கள் எம்.எல்.ஏக்களாக செயல்பட முடியாது.
அதுமட்டுமின்றி இந்த வழக்கு முடிந்த பின்னர்தான் சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெட்டுப்பை நடத்த முடியும் என்பதால் இது ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு பாசிட்டிவ் தான். ஆனால் தற்போது இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி, தினகரன் அணிக்கு ஐகோர்ட் ஆப்பு வைத்துள்ளது.
இந்த வழக்கிற்காக மூன்று நீதிபதிகள் அமர்வு இனிமேல் நியமனம் செய்யப்பட்டு அதன் பின்னர் அவர்கள் ஒருசில வாய்தாக்கள் போட்டு விசாரணையை முடிக்கும் வரை 18 எம்.எல்.ஏக்களும் பொறுமை காக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் 3 நீதிபதிகள் அமர்வில் 18 எம்.எல்.ஏக்களுக்கு ஆதரவாக ஒருவேளை தீர்ப்பு கூறினாலும், ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு உள்ளது. அதற்குள் அடுத்த பொதுத்தேர்தலே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவே 18 எம்.எல்.ஏக்களின் கதி குறித்து அரசியல் விமர்சகர்கள் கவலை கொண்டுள்ளனர்.