Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுனர் தன்னுடைய உரையில் தவிர்த்த வார்த்தைகள் என்ன? வெளியான விவரம்!

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2023 (15:21 IST)
இன்று சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் தமிழ் நாடு, திராவிட நாடு போன்ற வார்த்தைகளை ஆளுநர் வாசிக்காமல் புறக்கணித்தார். இதனை அடுத்து பெரும் சர்ச்சை எழுந்தது. ஆளுனர் வாசித்த உரை தமிழக அரசால் எழுதித் தரப்பட்ட உரை. அது பற்றி முன்னரே ஆளுனரிடம் ஒப்புதல் பெற்ற பிறகே அதைக் கொடுத்ததாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

இந்நிலையில் தமிழக அரசு கொடுத்த உரையில் ஆளுனர் வாசிக்காமல் விட்ட வரிகள் மற்றும் வார்த்தைகள் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

அதில் ‘தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர்’ ஆகிய பெயர்களை வாசிக்காமல் விட்டுள்ளார். மேலும் “சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம், பகுத்தறிவு’ ஆகியவற்றையும் அவர் வாசிக்கவில்லை.

மேலும் ‘மிழ்நாடு அரசு என்ற வார்த்தையை இந்த அரசு’ என மாற்றி வாசித்துள்ளார். மேலும் தமிழக அரசு பற்றிய வாக்கியத்தில் ‘சமூகநீதி உள்ளிட்ட கொள்கைகளைக் கொண்ட மிகச்சிறந்த ஆட்சி முறை’ என்பதைப் படிக்காமல் தவிர்த்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments