Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாடு விட்டு ஆளுனர் பயந்து ஓடும் காலமும் வெகு விரைவில்.. செந்தில் குமார் எம்பி டுவிட்!

Advertiesment
Dr Senthil Kumar
, திங்கள், 9 ஜனவரி 2023 (14:07 IST)
சட்டமன்றத்தை விட்டு வெளியேறிய ஆளுநர் விரைவில் தமிழ்நாட்டை விட்டு பயந்து ஓடும் காலம் வரும் என திமுக எம்பி செந்தில்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
 
தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு ஆளுநரை சட்டமன்றத்தில் இருந்து வெளியேறி செய்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தைரியத்திற்கு வாழ்த்துக்கள் . இதேபோல் ஆளை விடுங்க போதும், முடியவில்லை என்று இன்றை போல் தமிழ்நாட்டை விட்டு பயந்து ஓடும் காலம் வெகுவிரைவில் வரும் என்றும் திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
 
இதற்கு நெட்டிசன்கள், ‘ஆளுநர் பயந்து ஓடவில்லை என்றும் முதல்வர் பேச்சை ஒரு பொருட்டாக மதிக்காமல் வெளியே போய்விட்டார் என்றும் ஆனால் இது கூட புரியாமல் நீங்கள் பயந்து ஓடுகிறார்கள் என்று டுவிட் செய்து இருக்கிறீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் : விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு