Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் : விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு

Advertiesment
Thirumavalavan
, திங்கள், 9 ஜனவரி 2023 (14:01 IST)
ஆளுநர் மாளிகையில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இன்று சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி,  சபை நடவடிக்கை நடந்து கொண்டிருக்கும் போது திடீரென வெளியேறினார்.
 
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறியிருப்பதாவது: ஆளுநரின் நடவடிக்கைகள், அவரின் ஆர்எஸ்எஸ் முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. தேசியகீதம் இசைப்பதற்குள் ஆளுநர் பேரவையிலிருந்து வெளியேறியது அவை மீறல் மட்டுமின்றி, தேசியகீத அவமதிப்புமாகும். 
 
அவர் இனியும் அப்பதவியில் நீடிக்கத் தகுதியில்லை. எனவே அவர் பதவி விலக வலியுறுத்தி சனவரி-13 அன்று விசிக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். ஆளுநரின் போக்குகள் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றுதான். இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையில் முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனிமேல் தனித்து போட்டியிட மாட்டோம்: பிரேமலதா விஜயகாந்த்