இலங்கையில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த சுழற்சியால் டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் மழைப் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.
மழை, புயல் போன்ற வானிலைத் தகவலகளை சென்னை வானிலை மையம் போலவே சிலத் தனியார் அமைப்புகளும் தனிநபர்களும் கொடுத்து வருகின்றனர். இவர்கள் கொடுக்கும் முடிவுகள் துல்லியமாக இருப்பதால் மக்களும் அவர்களைப் பின் தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் துல்லியமான வானிலை அறிக்கைகளைக் கொடுப்பவர்களில் செல்வக்குமாரும் ஒருவர்.
நேற்று அறிவித்துள்ள ஒரு அறிக்கையில் இலங்கைக்கு அருகே ஒரு புதியக் காற்றழுத்த சுழற்சி உருவாகி இருப்பதால் டெல்டா மாவட்டஙளில் இன்றிரவு முதல் மீண்டும் மழைத் தொடங்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது ’வங்கக்கடலில், இலங்கைக்கு அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த சுழற்சி இன்று திரிகோணமலையை அருகே வந்தடையும். இதனால் இலங்கை முழுவதும் இன்று முதல் நல்ல மழை பெய்யும். இந்த காற்றழுத்த சுழற்சியால் தமிழகத்தைப் பொறுத்தவரை நாகை, திருவாரூர், கடலூர், காரைக்கால் ஆகிய டெல்டா மாவட்டங்களில் இன்றூ இரவு முதல் மழைத் தொடங்கும். நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழைப் பெய்ய வாய்ப்புண்டு.கடலூர் மாவட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டம் வரை மழைப் பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழைப் பெய்யும்’ என அறிவித்துள்ளார்.