இன்று 8 மாவட்டங்களில் கோடை மழை: இடி மின்னலுடன் மழை பெய்யும் என எச்சரிக்கை..!

Siva
ஞாயிறு, 27 ஏப்ரல் 2025 (09:21 IST)
இன்று தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் கோடை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் தற்போது கடும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது என்பதும், சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

ஆனால் அதே நேரத்தில் ஒரு சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் கோடை மழை பெய்யும் என்றும், இடி மின்னலுடன் கூடிய மழை காரணமாக பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று, நாகப்பட்டினம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று, புதுவையிலும் லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கண்ட 8 மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி நட்சத்திர ஹோட்டலில் 6 மாதங்கள் தங்கிய பெண் கைது.. பாகிஸ்தானில் இருந்து பெரிய தொகை வந்ததா?

திருமணமான தாய்மாமா மகளை உறவுக்கு அழைத்த இளைஞர்.. சம்மதிக்காததால் துப்பாக்கியால் சுட்டு கொலை..!

கோவாவில் 77 அடி உயர ராமரின் வெண்கல சிலை.. பிரதமர் மோடி திறக்கிறார்..!

செங்கோட்டையன் இணைவு!.. தவெகவுக்கு என்ன லாபம்?.. அதிமுகவுக்கு என்ன நஷ்டம்?...

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments