Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் மேலும்ம் 3 தீவிரவாதிகள் வசிப்பிடங்கள் தகர்ப்பு! - இந்திய ராணுவம் அதிரடி!

Prasanth Karthick
ஞாயிறு, 27 ஏப்ரல் 2025 (09:18 IST)

காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் பயங்கரவாதிகளின் வசிப்பிடங்கள் தகர்க்கப்பட்டுள்ளது.

 

கடந்த 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியானார்கள். இதற்கு பதிலடி தரும் நடவடிக்கையில் இறங்கியுள்ள இந்திய ராணுவம் பயங்கரவாதிகளை தேடுதல் வேட்டையாடி வருகிறது.

 

இந்த தேடுதல் வேட்டையின்போது லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த அடில் உசேன் தோகர், ஆஷிப் ஷேக் உள்ளிட்ட முக்கிய பயங்கரவாதிகளின் வசிப்பிடங்கள் தேடி அழிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முன் தினம் நடந்த தேடுதலில் லஷ்கர் இ தொய்பாவின் முக்கிய தளபதியான ஷாஹித் அகமது குட்டாயின் வீடும், ஜாகிர் அகமது கனியின் வீடும் தகர்க்கப்பட்டன.

 

நேற்று ஸ்ரீநகர் பகுதியில் 12 இடங்களில் இந்திய ராணுவம் சோதனை நடத்தியது. அப்போது பயங்கரவாதிகளின் மறைவிடத்தை கண்டறிந்து அழித்துள்ளனர். மேலும் துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

88 % இந்தியர்களிடம் கார் வாங்கும் அளவு வசதியில்லை! - சுசுகி நிறுவன தலைவர் ஆர்.சி.பார்கவா!

இன்று 8 மாவட்டங்களில் கோடை மழை: இடி மின்னலுடன் மழை பெய்யும் என எச்சரிக்கை..!

காஷ்மீரில் மேலும்ம் 3 தீவிரவாதிகள் வசிப்பிடங்கள் தகர்ப்பு! - இந்திய ராணுவம் அதிரடி!

மும்பை அமலாக்கத்துறை கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. ஆவணங்கள் சாம்பலானதா?

அகிம்சை எல்லாம் அப்புறம்.. மக்களை காப்பது தான் அரசின் கடமை.. ஆர்எஸ்எஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments