இன்று 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை: வானிலை எச்சரிக்கை..!

Siva
திங்கள், 20 ஜனவரி 2025 (07:49 IST)
இன்று தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் மிதமான மழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் இன்று  5 மாவட்டங்களில்இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவ மழை முடிந்த பின்னும், தமிழகத்தின் சில பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
 
நேற்று, 19 மாவட்டங்களில் மழை பெய்ததாக தகவல் வெளியானது. இன்று நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமாரி ஆகிய ஐந்து மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனை அடுத்து, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னையை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சில இடங்களில் நம் விதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments