Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாங்கள் அமைத்துள்ளதுதான் ’மக்கள் நலக் கூட்டணி ’- ராமதாஸ் அறிவிப்பு

நாங்கள் அமைத்துள்ளதுதான் ’மக்கள் நலக் கூட்டணி ’- ராமதாஸ் அறிவிப்பு
, செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (12:42 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள  40 தொகுதிகளிலும் ஜெயிக்க வேண்டும் என அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சிகள் போட்டா போட்டு கூட்டணி பேரம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் அதிமுக சட்டென முடிவுக்கு வந்து இன்று பாமகவுடன் தன் கூட்டணி டீலிங்கை முடித்துள்ளது. சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்ற இதுகுறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகம் புதுச்சேரியில் உள்ள 40 பாராளூமன்ற தொகுதியில் பாமக வுக்கு 7 தொகுதிகளும், ராஜ்யசபாவில் 1 சீட்டு, 7பேர் விடுதலை என்ற ஒப்பந்தத்தை முடிவு செய்துள்ளனர்.
 
இன்று காலையில் ,இந்த உடன்படிக்கையில் பாமகவின் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவரது மகன் அன்புமணி கட்சி தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.அதிமுகவில் தமிழக முதல்வர் எடபாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக தொண்டர்கள் ஆகியோர் திரண்டு கூட்டமாகக்ல கலந்துகொண்டனர்.
 
மேலும் பாமக வின் 10 கோரிக்கைகளுக்கு அதிமுக குரல் கொடுக்க வேண்டும் எனவும் பாமக தலைவர் ராமதாஸ்  அதிமுகவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இந்த ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் கூறியதாவது:
 
’தமிழக மக்களின் நலனுக்காகவே இந்த கூட்டணி அமைத்துள்ளோம். ஒதுக்கப்பட்டுள்ள 7 தொகுதிகளில் எந்தெந்த தொகுதிகள் என்று பின்னர் தெரிவிப்போம். தமிழக உரிமைகளை மீட்பதற்காகவே 10 கோரிக்கைகளை முதல்வரிடம் அளித்திருக்கிறோம்.
 
அதிமுகவுடன், பாமக சேர்ந்து அமைத்துள்ளது மெகா கூட்டணி ஆகும்’. என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக - பாமக கூட்டணி உறுதியானது...தொகுதி ’டீலும்’ முடிந்தது...