Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று சென்னை வருகிறார் அமித்ஷா: கூட்டணி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு!

Advertiesment
அதிமுக
, செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (08:21 IST)
மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணியை நேற்று உறுதி செய்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, இன்று சென்னை வருகிறார். அவருடைய இன்றைய பயணத்தில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.

கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அதிமுகவுக்கு 25 இடங்களும், பாஜகவுக்கு 15 இடங்களும் பிரித்து கொள்ள முடிவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது. பாஜகவின் 15 இடங்களில் தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுக்கு பிரித்து கொடுக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது

இந்த நிலையில் இன்று சென்னை வரும் அமித்ஷா, அதிமுக-பாஜக கூட்டணி குறித்த அதிகார்பூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு எதிராக மத்திய அரசு எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கைகள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த ரூ.2000 திட்டம் ஆகியவை அதிமுக-பாஜக கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

webdunia
இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாளில் திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவருமென்றும், இந்த கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விரைவில் சென்னை வரவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தானுக்கு அள்ளி வழங்கிய இளவரசர் இன்று டெல்லி வருகை!