Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2021 தேர்தலில் அதிமுகவினரை விரட்டினோம்.!. 2024 தேர்தலில் எஜமானர்களை விரட்ட வேண்டும்..! உதயநிதி ஸ்டாலின்..

Advertiesment
udhay

Senthil Velan

, செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (14:15 IST)
2021 தேர்தலில் அதிமுகவினரை விரட்டியதாகவும், 2024 தேர்தலில் அவர்களின் எஜமானர்களை விரட்ட வேண்டும் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற திமுகவின் ஆதிதிராவிடர் நலக் குழு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய அவர், திமுக மீது அவதூறு பரப்புபவர்கள் மீது உடனுக்குடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்றார்.

கடந்த முறை  நாடாளுமன்ற தேர்தலில் திமுக வாங்கிய வாக்குகளை விட 1% வாக்கு இம்முறை குறைந்தாலும், மக்களிடம் திமுகவின் செல்வாக்கு குறைந்து விட்டதாக சொல்வார்கள் என்றும் 40 தொகுதிகளிலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் வேட்பாளர் என நினைத்து பணியாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் உதயநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

7 அல்லது 8 நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிடும் என குறிப்பிட்ட அவர்,  10 ஆண்டு ஆட்சியில் அதிமுகவினர் தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்து விட்டார்கள் என்று விமர்சித்துள்ளார்.

வருமானவரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடத்தி திமுக-வை அடக்க பார்க்கிறார்கள் என்றும் நாங்கள் அடங்க மாட்டோம்,  மத்திய அரசின் அடக்குமுறைக்கு திமுக குடும்பத்தில் உள்ள கைக்குழந்தை கூட பயப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யாரை நினைக்கிறாரோ அவரே மத்தியில் பிரதமராக வேண்டும் என்றால் 40 தொகுதியையும் வென்றாக வேண்டும் என்றும் 2021 தேர்தலில் அதிமுகவினரை விரட்டினோம், 2024 தேர்தலில் அவர்களின் எஜமானர்களை விரட்ட வேண்டும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரும் மக்களவை தேர்தலில் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் போட்டி: மத்திய அமைச்சர் தகவல்