Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வயநாடு நிலச்சரிவு.. கடலில் தென்பட்ட உடல்.. கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டிருக்குமா?

wayanad

Mahendran

, புதன், 7 ஆகஸ்ட் 2024 (10:59 IST)
வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு வாரத்திற்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் இப்போதும் தேடுதல் பணியை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் கடலுக்குள் ஒரு உடல் தென்பட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வயநாடு அருகே உள்ள மூன்று மலை கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் இதுவரை 224 பேர் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அடையாளம் தெரியாத 30 உடல்கள் மற்றும் சில உடல் பாகங்கள் அனைத்து மதப் பிரார்த்தனையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென கடலுக்குள் ஒரு உடல் தென்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அந்த உடலை மீட்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து சாலியாறு வழியாக கடலுக்குள் சில உடல்கள் சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இந்திய கடற்படை இடம் இது குறித்து ஆய்வு செய்ய வலியுறுத்தி உள்ளதாகவும் அதற்கு கடற்படையும் ஒப்புக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே கடலில் உடல்களை தேடும் வேட்டை நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 112 குழுக்கள், 913 தன்னார்வலர்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் இன்னும் மீட்பு பணிகள் ஈடுபட்டுள்ளனர் என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆயிரம் இஸ்ரேலியர்களை கொன்றவர் ஹமாஸின் அடுத்த தலைவர்?? - இஸ்ரேல் ரியாக்‌ஷன் என்ன?