Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வயநாடு நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் சாமிநாதன் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார்

Advertiesment
Kerala wayanad land silde

J.Durai

, திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (20:37 IST)
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன்  கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 
திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரணப் பொருட்களை கேரளா மாநிலத்திற்கு கொண்டு செல்லும் கனரக வாகனங்களை கொடி அசைத்து  அனுப்பி வைத்தார்.
 
இதனை தொடர்ந்து அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தாவது......
 
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரணப் பொருட்களை கேரளா மாநிலத்திற்கு கொண்டு செல்லும் கனரக வாகனங்களை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்திலிருந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதிக்கப்பட்டபொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிடும் வகையில் அத்தியாவசிய பொருட்களான 38,000 பிஸ்கட் பாக்கெட்களும், 1300 கிலோ பால் பவுடர், 330 பெட்சீட், 300 துண்டு, 1400 டிசர்ட்
300 லுங்கிகள். 800 நைட்டிகள், 500 நாப்கிங்கள். 500 பாதுகாப்பு உடைகளும், 2000 முகக்கவசங்ளும், 3500 டூத் பிரஸ்களும், 2000 டூத் பேஸ்ட்களும், 2000 சாம்புகளும், 250ஆடைகளும், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் 2 வாகனத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலிருந்து கேரளா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் சத்யராஜ் நடிக்கும்'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்'சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!