Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லணை தண்னீர் திறப்பில் 6 அமைச்சர்கள்!

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (08:35 IST)
கல்லணையில் இருந்து இன்று பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் அதில் 6 அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

காவிரி டெல்டா பாசன விவசாயத்திற்காக வருடந்தோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை குறுவை சாகுபடிக்காக திறக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று அதிகாலை திருச்சி முக்கொம்பு பகுதியை வந்தடைந்தது. அதையடுத்து இன்று கல்லணை பகுதியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, எஸ்.எஸ்.சிவசங்கர், மெய்யநாதன் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments