Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபாச வீடியோ டவுன்லோடு செய்தால் 10 ஆண்டுகள் சிறை.. சென்னை போலீஸ் எச்சரிக்கை..!

Siva
வியாழன், 6 மார்ச் 2025 (09:40 IST)
ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிறக்கம் செய்தால் சிறைத் தண்டனை என சென்னை போலீசார் எச்சரித்துள்ளனர்.

பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக, ஆபாச படம் மற்றும் வீடியோ பதிவிறக்கம் செய்த 13,000 பேருக்கு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், பாலியல் வன்கொடுமை, பெண்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 43,000 பேர் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிறக்கம் செய்த 13,000 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

வியாபார நோக்கத்தில் ஆபாச படம் அல்லது வீடியோ பதிவிறக்கம் செய்வது தெரிய வந்தால், குற்றவாளிகள் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை பெற்றிடுவார்கள். மேலும், அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிறக்கம் செய்தால் பெரும் ஆபத்து என்ற உண்மையை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ.. டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்.. வைகோ..!

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

அடுத்த கட்டுரையில்