Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறிய கடன் வாங்கியவர்களுக்கு தொல்லை கொடுத்தால் 10 ஆண்டு சிறை: அமைச்சர் எச்சரிக்கை..!

Advertiesment
jail

Mahendran

, புதன், 5 பிப்ரவரி 2025 (10:20 IST)
சிறிய அளவில் கடன் வாங்கியவர்களுக்கு தொல்லை கொடுத்தால், 10 ஆண்டு சிறை தண்டனை என கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரர் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சிறு கடன்களை வசூலிக்க தொல்லை கொடுப்பதை தடுப்பதற்காக அமைச்சரவை ஒப்புதல் பெற்று, சட்ட திருத்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரர் தெரிவித்துள்ளார்.
 
சிறு கடனை கட்டாயப்படுத்தி துன்புறுத்தி வசூல் செய்தால், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை என்கிற சட்ட விதிமுறைகள் ஏற்கனவே உள்ளன. இந்த தண்டனை காலத்தை 10 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்றும், அதேபோல் அபராத தொகை  ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
சட்ட விதிகளை மீறி, சிறு கடனை வசூலிக்கும் நபர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும் என்பதை உணர்த்தவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. சிறு கடன் வசூலில் தொல்லை கொடுப்பவர்களுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து உரிய வழிமுறைகளை முதல்வர் சித்தராமையா, சட்டத்துறைக்கு கூறியுள்ளதாகவும், எல்லா அம்சங்களையும் கருத்தில் கொண்டு தான் இந்த அவசர சட்டம் கொண்டு வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் உச்சம் சென்ற தங்கம் விலை.. ஒரு சவரன் 63 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்ததால் பரபரப்பு..!