Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்காளர் சிறப்பு முகாம்: 4 நாட்களில் 8.59 லட்சம் பேர் விண்ணப்பம்!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (19:26 IST)
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்கம் செய்யவும், திருத்தம் செய்யவும் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில் 8.59 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இதில் பெயர் சேர்க்க மட்டும் 6.14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது. மேலும் நவம்பர் 27, 28ம் தேதியும் சிறப்பு முகாம் நடைபெறும் என்றும், அந்த தேதியிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது என்பதும், அதன்படி தமிழகத்தில் தற்போது 6 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 531 வாக்காளர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

முன்கூட்டியே கருத்துக் கணிப்பு வெளியிட்ட தொலைக்காட்சி: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்..! கூடுதலாக 57 பேரை நியமித்தது தேர்தல் ஆணையம்..!!

எல்.முருகன், அண்ணாமலைக்கு குமரியில் புக் செய்த அறைகள் ரத்து: பாஜக தலைமை அதிரடி உத்தரவு..!

கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் மனு: சவுக்கு சங்கர் அதிரடி முடிவு..!

இந்த கோவிலில் வணங்கினால் பதவி உறுதி? – திருவாரூர் கோவிலில் ஓபிஎஸ் சிறப்பு தரிசனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments