Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – தமிழகத்தில் 5.91 கோடி வாக்காளர்கள் !

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – தமிழகத்தில் 5.91 கோடி வாக்காளர்கள் !
, வியாழன், 31 ஜனவரி 2019 (17:35 IST)
நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருப்பதால் வாக்காளர் இறுதிப்பட்டியலை இன்று  தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று வெளியிட்டார். 
 

கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதியன்று மாதிரி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது தமிழகத் தேர்தல் ஆணையம். பட்டியலில் உள்ள பிழைகள் மற்றும் விடுபட்ட பெயர்களை சேர்த்தல் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பெயர் இருத்தல் போன்றவற்றைத் திருத்தும் பணி மூன்று மாதக்காலமாக நடைபெற்று வந்தது.

இந்தப் பணிகள் இப்போது முடிந்துள்ள நிலையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  இன்று இதை வெளியிட்டுள்ள தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டார். இதில் 31 ஜனவரி 2019 இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழக மொத்த வாக்காளர்கள் 5.91 கோடி பேர். இதில் ஆண்கள் 2.92 (2,9256,960) கோடி பேர். பெண்கள் 2.98  (2,98,60,765) கோடி பேர். மூன்றாம் பாலினத்தவர் 5472  பேர் ஆகும்.
webdunia

மேலும் வயது வாரியாகவும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
18-19  வயது வாக்காளர்கள் -    8,98,759   பேர்
20-29  வயது வாக்காளர்கள் -  1,18,37,274  பேர்
30-39  வயது வாக்காளர்கள் - 1,38,55,913  பேர்
40-49  வயது வாக்காளர்கள் -  1,27,56,864  பேர
50-59  வயது வாக்காளர்கள்   -  95,86,247  பேர்
60-69  வயது வாக்காளர்கள்   -  61,22,460  பேர்
70-79  வயது வாக்காளர்கள்  -   30,53,480  பேர்
80+  வயது வாக்காளர்கள்     -  10,12,200  பேர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேஸ்புக் இனி காலி ...இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 100 கோடி...