Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நம்பிக்கை வாக்கெடுப்பு ; சட்டசபை நிகழ்வு - உடனுக்குடன்

Advertiesment
நம்பிக்கை வாக்கெடுப்பு ; சட்டசபை நிகழ்வு - உடனுக்குடன்
, சனி, 18 பிப்ரவரி 2017 (11:09 IST)
தமிழக முதல்வராக தேந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க, நம்பிக்கை வாக்கெடுப்பு கூறியுள்ளார். எனவே சட்டசபையில் நடக்கும் நிகழ்வுகள் உங்களுக்காக இதோ உடனுக்குடன்....


* ஆளுநரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால், திமுக எம்எல்ஏக்கள் ஆளுநர் மாளிகை முன் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

* சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவிப்பு.

* 122 வாக்குகள் பெற்று எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிருபித்தார்.

* எதிர்க்கட்சியை வெளியேற்றி விட்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி.

* நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்று எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபித்தார்.

* எடப்பாடி பழனிச்சாமிக்கு 11 எம்எல்ஏக்கள் எதிர்ப்பு, நடுநிலையாக யாரும் இல்லை.

* எடப்பாடி பழனிச்சாமிக்கு 122 எம்எல்ஏக்கள் ஆதரவு.

* ஆளுநர் மாளிகைக்கு சென்றார் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்.

* விதி 99-இன் படி எண்ணி கணக்கிடும் முறையில் ஓட்டெடுப்பு நடக்கிறது.

* நாம்பிக்கை வாக்கெடுப்பு துவங்கியது: காங்கிரஸ் கட்சியும் வெளிநடப்பு!

* எதிர்க்கட்சியினர் இல்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது.

* பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது.

* சட்டசபை வளாகத்தில் இருந்து வெளியேறிய மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் ஆளுநரை சந்திக்க ராஜ் பவன் நோக்கி பயணம்.

* ரகளையால் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட சட்டசபை மீண்டும் கூடியது.

* காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு.
 
* காவல் துறையினர் தங்களை அடித்து சட்டையை கிழித்தனர்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.

* சபாநாயகர் வேண்டுமென்றே சட்டையை கிழித்துக்கொண்டார்: எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்.

* பேரவையில் நாங்கள் தாக்கப்பட்டோம்: எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்.

* ஆளுநரை சந்தித்து முறையிட புறப்பட்டார் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்.

* வெளியேற்றப்பட்ட திமுக சட்டசபை உறுப்பினர்கள் மீண்டும் சட்டசபைக்குள் நுழைய முயற்சி.
 
* எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டை கிழிக்கப்பட்டது.

* மு.க.ஸ்டாலின், துரைமுருகன் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றம்.
 
* வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ முருகன் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்.

* ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்களில் பெரும்பாலானோர், பேரவை காவலர்களால் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்.

* ஸ்டாலின் சபைக்குள் தரையில் அமர்ந்து தர்ணா!
 
* சட்டப்பேரவை வளாகத்தில் திமுக உறுப்பினர்கள் மா.சுப்பிரமணியன், நந்தகுமார், சேகர் பாபு தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
 
* தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சபாநாயகர் தனபாலுடன் சந்திப்பு.

*  திமுக உறுப்பினர்களை வெளியேற்ற முடியாததால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
 
* சபாநாயகர் உத்தரவுப்படி 88 திமுக உறுப்பினர்களை காவலர்களால் வெளியேற்ற முடியவில்லை.

* சட்டப்பேரவையில் மீண்டும் அமளி ஏற்பட்டதால் பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது

* சட்டப்பேரவை இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.

* சட்டப்பேரவை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைப்பு

* அதிமுக அமைச்சர்களின் மேஜை மீது ஏறி திமுகவினர் அமளி, வெளியேற்ற முடியாமல் அவைக் காவலர்கள் திணறல்

* வெளியேற உத்தரவிட்டதால் திமுகவினருக்கும் அவைக் காவலர்களுக்கும் தள்ளுமுள்ளு

* திமுக எம்எல்ஏக்கள் வெளியேற மறுப்பு

* திமுக எம்எல்ஏக்கள் வெளியேற மறுப்பு பேரவையில் தள்ளுமுள்ளு

* பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை முன்மொழிந்தார் எடப்பாடி பழினிச்சாமி.

* அமளியில் ஈடுபட்டதால் திமுக உறுப்பினர்களை கூண்டோடு வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு.

* ரகசிய வாக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மீண்டும் கோரிக்கை.

* சட்டப்பேரவை வளாகத்தில் 1000 அதிரடிப்படை போலீஸ் குவிப்பு.

* என் சட்டையை கிழித்தனர்: சபாநாயகர் வேதனை

* அவையில் எனக்கு நேர்ந்த கொடுமையை எங்கே போய் முறையிடுவது: சபாநாயகர்

* அமளியால் ஒத்திவைக்கப்பட்ட சட்டப்பேரவை மீண்டும் கூடியது.


ரகளையின் மத்தியில் சட்டசபை ஊழியர் பாலாஜி மயங்கி விழுந்ததால் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

* வன்முறை வெறியாட்டங்களின் மூலம் வாக்களித்த மக்களை அவமானத்தில் கூனிக் குறுக வைத்துள்ளனர் சட்டப்பேரவை உறுப்பினர்கள்: ராமதாஸ் டுவீட்


* சபாநாயகர் தனபால் இருக்கையில் ஆயிரம்விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் அமர்ந்து ரகளை செய்தார்.

* பேரவையில் நாற்காலிகள் உடைப்பு, மைக்குகள் உடைப்பு.

* சபை ஒத்திவைப்பு சட்டசபையில் நாற்காலி வீச்சு, ரகளை
 
* அவையை நடத்தவிடாமல் திமுகவினர் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபடுவதாக சபாநாயகர் தனபால் குற்றச்சாட்டு.
 
* புத்தகங்களை கிழித்து எரிந்து திமுகவினர் சட்டப்பேரவையில் அமளி.
 
* அவையில் மையப்பகுதியில் திமுகவினர் ஸ்டாலின் தலைமையில் கூடி வேண்டும், வேண்டும் ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என முழக்கம்.

* கடும் ரகளை காரணமாக சட்டப்பேரவை மதியம் ஒரு மணி வரை ஒத்திவைப்பு.

* சபாநாயகர் மைக் உடைப்பு, இருக்கை சேதம். அவை மதியம் ஒரு மணி வரை ஒத்திவைப்பு. வெளியேறினார் சபாநாயகர்.

* சபாநாயகர் மைக் உடைப்பு, வெளியேறிய சபாநாயகர்.

* சட்டப்பேரவையில் இருந்து சபாநாயகர் வெளியேறினார்.
 
* ரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு திமுக எம்எல்ஏ பூங்கோதை மேஜை மீது ஏறி நின்று வலியுறுத்தல்.

* எடப்பாடி அணியினர் பேரவையில் அமைதி காத்து வருகின்றனர்.
 
* திமுக எம்எல்ஏ பூங்கோதை மேஜை மீது ஏறி நின்று வாக்குவாதம்.

* சபாநாயகர் தனபாலை முற்றுகையிட்டு திமுக எம்எல்ஏக்கள் முழக்கம்.

* எதிர்க்கட்சியினர் மற்றும் பன்னீர்செல்வம் அணி எம்எல்ஏக்கள் எழுந்து நின்று கடும் அமளி, முழக்கம்.

* இன்று ஓட்டெடுப்பு கூடாது: திமுக திட்டவட்டம்
 
* ரகசிய வாக்கெடுப்பு: ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக திமுக எம்எல்ஏக்கள் முழக்கம்.

* எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்எல்ஏக்கள் பேரவையில் அமைதியாக உள்ளனர்.

* மக்களை சந்திக்க எம்எல்ஏக்களை அனுமதிக்க வேண்டும்: மயிலாப்பூர் எம்எல்ஏ ஆர்.நடராஜ்

* எவ்வாறு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது என்னுடைய உரிமை: சபாநாயகர் தனபால்

* வெளியில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து பேரவையில் பேச அனுமதி இல்லை: சபாநாயகர் தனபால் பேச்சு.

* ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் ராமசாமியும் வலியுறுத்தல்.
 
* தற்போது காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராமசாமி பேசி வருகிறார்.

* கூவத்தூர் குறித்து பேச சபாநாயகர் தனபால் அனுமதி மறுப்பு.

* கூவத்தூர் விடுதியில் எம்எல்ஏக்களை சிறைவைத்தது அனைவருக்கும் தெரியும் எனவே ரகசிய வாக்கெடுப்பு நடத்த ஓபிஎஸ் கோரிக்கை.

* மக்களின் குரல் பேரவையில் எதிரொலிக்க வேண்டும்: பன்னீர்செல்வம்

* சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசி வருகிறார்.


நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடந்த கூடாது என்று திமுக எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் கோரிக்கை.

ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தாலும், கணக்கெடுப்பு நடக்கிறது. அவரது மைக் கட் செய்யப்பட்டுவிட்டது.

அனேகமாக அவையை ஒத்தி வைக்கும் சூழல்

* அவையில் கூச்ச்சலும் குழப்பமும் நிலவி வருவதால் கணக்கெடுக்க முடியவில்லை.


* திருப்பத்தூர் எம்எல்ஏ பெரிய கருப்பன் மேஜை மீதேறி வேட்டியை மடித்துக் கட்டினார்.

* 230 சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பு


* 116 எம்.எல்.ஏ க்களின் ஆதரவு தேவை


* மொத்தமுள்ள 6 பகுதிகளில் முதல் பகுதியில் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

* வாக்கெடுப்பு தொடங்கியது, 6 பிரிவுகளாக பிரித்து வாக்கெடுப்பு தொடங்கியது.

* பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.

* திமுக எம்.எல்.ஏக்களை பார்த்து தலை மேல் கையை உயர்த்தி கும்பிட்டார் ஓபிஎஸ்.
 
* தன்மான சிங்கம் என்று ஓபிஎஸ் யை திமுகவினர் கூறி கோஷமிட்டனர்.
 
* பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவாக திமுக எம்எல்ஏக்கள் முழக்கம்.

* ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நிராகரிப்பு

* அனைத்து எம்எல்ஏக்களுக்கும் போதிய பாதுகாப்பு வழங்கப்படும்: சபாநாயகர்

* தொடர் அமளி, உறுப்பினர்கள் அமைதி காக்க சபாநாயகர் தனபால் தொடர் வேண்டுகோள்

எம்.எல்.ஏ.க்கள் என்ன கைதிகளா? -  ஸ்டாலின் கோபம்
 
வேலூர் சிறை கைதிகளை போல எம்.எல்.ஏ.க்களை போலீஸார் அழைத்து வருகின்றனர்.
 
செம்மலை பேச மைக் வழங்கக்கோரி ஸ்டாலின் கோரிக்கை
 
ஓபிஎஸ் ஆதரவாக திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளிப்பதற்கு அதிமுக உறுப்பினர்கள் அமளி
 
நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்மொழிந்தார் எடப்பாடி பழனிச்சாமி...
 
ரகசிய வாக்கெடுப்பு கோரி ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மற்றும்  திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தல்
 
அதிமுகவிற்கு எதிராக திமுக எம்.எல்.ஏக்கள் அமளி
 
அசாதாரண சூழ் நிலை நிலவுவதால் உறுபினர்கள் பேச அனுமதிக்க வேண்டும் - துரை முருகன்
 
எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பு வேண்டும் செம்மலை பேச்சு.
 
அவை கூடிய சிறிது நேரத்தில் கடும் அமளி ஏற்பட்டுள்ளது.
 
தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் தொடங்கியது


  ஆதரவு எதிர்ப்பு
எடப்பாடி பழனிச்சாமி    
ஓ.பன்னீர்செல்வம்    

 
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியா?