Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியா?

எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியா?
, சனி, 18 பிப்ரவரி 2017 (11:08 IST)
தமிழக முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலா அணியின் எடப்பாடி பழனிச்சாமி இன்று தமிழக சட்டசபையில் இன்று தனது  பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி இன்று நம்பிக்கை வாக்கு  கோருகிறார்.

 
எடப்பாடி பழனிச்சாமி இன்று சிறிது நேரத்தில் நம்பிக்கை வாக்குக்கு எடப்பாடி கோருவார். அவர் தனக்கு 124 எம்.எல்.ஏக்கள்  ஆதரவு இருப்பதாக கூறியிருந்தார். ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 122 குறைந்துள்ளது.
 
இந்நிலையில் எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணியான காங்கிரஸ் கட்சியும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக  வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். அதனால் இந்த எண்ணிக்கை மேலும் குறையவும் வாய்ப்புள்ளது.
 
எடப்பாடி பழனிச்சாமியால் பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் போனால், திமுகவுக்கு ஒரு வாய்ப்பு தரப்படும். திமுக இந்த  வாய்ப்பை நிராகரிக்கும் நிலையில் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் நிலை ஏற்படும். இதேபோல கடந்த 1991ல்  திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது குறிப்பிடதக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக கொறடாவாக செம்மலை நியமனம்: சபாநாயகருக்கு மதுசூதனன் கடிதம்!