Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதச்சார்பிண்மையை காக்க திமுகவுக்கு வாக்களியுங்கள் - ஸ்டாலின்!!

Advertiesment
மதச்சார்பிண்மையை காக்க திமுகவுக்கு வாக்களியுங்கள் - ஸ்டாலின்!!
, வியாழன், 1 ஏப்ரல் 2021 (13:33 IST)
மாநில அரசின் உரிமையை காக்க மதச்சார்பிண்மையை காக்க திமுகவுக்கு வாக்களியுங்கள் மேட்டுப்பாளையத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தேர்தல் பரப்புரை. 

 
மேட்டுப்பாளையம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டிஆர்எஸ் சண்முகசுந்தரம், குன்னூர் தொகுதி திமுக வேட்பாளர் இழித்துரை ராமசந்திரன், உதகை காங்கிரஸ் வேட்பாளர் கணேசன்  கூடலூர் திமுக வேட்பாளர் காசிலிங்கம் உள்ளிட்ட 4 தொகுதியின்  திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க ஸ்டாலின் மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். 
 
அப்போது பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின் நீலகிரிக்கு, தமிழக முதல்வர் ஹெலிகாப்டரில் பிரசாரத்திற்கு வருகிறார். இதே முதல்வர் நீலகிரியில் நிலசரிவு ஏற்பட்ட போது ஹெலிகாப்டரில் வந்து பார்வையிட்டாரா?. நான் சென்று பார்வையிட்டேன். திமுக சார்பாக ரூ.10 கோடி நிதி வழங்கப்பட்டது. திமுகவை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் இதனை மக்களிடம் இங்கு வந்துள்ளவர்களிடம் உரிமையோடு கேட்கிறேன்.  
 
மேலும் தமிழகத்தின் பாரம்பரியத்தையும் பண்பாட்டினையும் அழித்து நீட் தேர்வை கொண்டு வந்து இந்தியை புகுத்தி மத வெடியை தூண்டலாம் என மோடி திட்டமிட்டுள்ளார்,இந்த மோடி மஸ்தான் வேலை எல்லாம் இங்கு பழிக்காது இது திராவிட மண்,பெரியார் பிறந்த மண்,அண்ணா கலைஞர் வாழ்ந்த மண் எனவே நான் முதல்வராவதுக்கு மட்டுமல்ல நமது மாநில அரசின் உரிமையை மீட்க வேண்டும் சுயமரியாதை காக்க வேண்டும் அதற்காக திமுகவுக்கு வாக்களியுங்கள் என ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தடுப்பூசி போட்டும் விடாத கொரோனா! அதிமுக வேட்பாளருக்கு கொரோனா!