Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இபிஎஸ் அணியிலிருந்து விலகி ஓபிஎஸ் அணியில் இணைந்த தொண்டர்கள்

Webdunia
வியாழன், 23 மார்ச் 2023 (22:51 IST)
கரூர் மாவட்ட அதிமுக இபிஎஸ் அணியிலிருந்து விலகி ஓபிஎஸ் அணியில் இணைந்த தொண்டர்களுக்கு மாவட்ட செயலாளர் கட்சித் துண்டு போட்டு வரவேற்பு.
 
கரூர் மாவட்டத்தில் ஓபிஎஸ் அணியின் புதிய மாவட்ட செயலாளராக ஆயில் ரமேஷ் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அவை தலைவர், அம்மா பேரவை செயலாளர் ஆகிய பொறுப்புகளுக்கும் நிர்வாகிகள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 
 
புதிய நிர்வாகிகள் அறிமுகம் கூட்டம் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்னாண்டாங்கோவில் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. புதிய நிர்வாகிகளுக்கு கட்சியினர் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
 
புதிய மாவட்ட செயலாளர் ஆயில் ரமேஷ் கட்சித் தலைவர்களான மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
 
அதனை தொடர்ந்து கரூர் மாவட்ட அதிமுக எடப்பாடி அணியில் இருந்து விலகி 50க்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ் அணியின் இணைத்தனர். மாவட்ட செயலாளர் ஆயில் ரமேஷ் புதிதாக தங்களது அணியில் இணைந்த நபர்களுக்கு கட்சி துண்டு போட்டு வரவேற்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகாரம் உள்ளது.. மசோதாக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை: ஆளுனர் தரப்பு வாதம்..!

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்கள் ரத்து! - அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி!

25 ஆண்டுகளில் அதிக வெப்பமான ஜனவரி மாதம்.. இந்த ஆண்டு கோடை கொளுத்துமா?

2026 தேர்தலில் தமிழகத்திலும் போட்டி.. புதுவை முதல்வர் அறிவிப்பு.. விஜய்யுடன் கூட்டணியா?

ரூ.465 கோடி ஆன்லைன் மோசடி: பிரபல டிராவல்ஸ் நிறுவனத்துக்கு தொடர்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments