Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாட்டைப் பிரிக்காதீர்கள் – கமலுக்கு பாலிவுட்டில் இருந்து எதிர்ப்பு !

Advertiesment
நாட்டைப் பிரிக்காதீர்கள் – கமலுக்கு பாலிவுட்டில் இருந்து எதிர்ப்பு !
, திங்கள், 13 மே 2019 (13:07 IST)
இந்து தீவிரவாதம் எனப் பேசி நாட்டைப் பிரிக்காதீர்கள் என விவேக் ஒபராய் கமலுக்கு பதில் தெரிவித்துள்ளார்.

பள்ளப்பட்டியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன்  ’உண்மையான முஸ்லீம்கள் தீவிரவாதத்தை ஏற்க மாட்டார்கள். மேலும் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் கொள்ளுப்பேரன் அவரது கொலைக்கு கேள்வி  கேட்க வந்துள்ளேன். இந்தியாவை பிரித்தாள நினைக்கும் சித்தாந்தத்தை வெளியேற்ற வேண்டும் என்றும், தீவிரவாதம் எந்த மதத்தின் பெயரில் இருந்தாலும் அது தவறு’ என்று  கூறியுள்ளார்.

கமலின் இந்த பேச்சுக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வந்துள்ளன. அதையடுத்து பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தனது டிவிட்டரில் ‘ கமல் அவர்களே நீங்கள் கலைஞர். கலைக்கு எப்படி மதம் கிடையாதோ அது போல தீவிரவாதத்துக்கும் மதம் கிடையாது. ஆனால் நீங்கள் ஏன இந்து என்ற வார்த்தையைக் குறிப்பிடுகிறீர்கள். முஸ்லீம்களின் பகுதி என்பதாலா ?.. தயவு செய்து நாட்டைப்  பிரிக்காதீர்கள்.. நாம் அனைவரும் ஒன்றுதான்.’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்துக்கள் குறித்து சர்ச்சை பேச்சு: கமல்ஹாசனின் பிரச்சாரம் திடீர் ரத்து!