Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்துக்கள் குறித்து சர்ச்சை பேச்சு: கமல்ஹாசனின் பிரச்சாரம் திடீர் ரத்து!

இந்துக்கள் குறித்து சர்ச்சை பேச்சு: கமல்ஹாசனின் பிரச்சாரம் திடீர் ரத்து!
, திங்கள், 13 மே 2019 (12:37 IST)
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர்தான் நாதுராம் கோட்சே என்றும் நேற்று அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது கமல் பேசினார். கோட்சேவை தீவிரவாதி என்று கூறியதை கூட பலர் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல் பேசியதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றான.
 
இந்த நிலையில் கமல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரது பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருவதால் இன்றும் நாளையும் கமல்ஹாசனின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
 
ஆனால் இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட கோவை சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற கமல் செல்வதால் இன்றைய பிரச்சாரம் மட்டும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கமல்ஹாசனின் இந்து தீவிரவாதம் குறித்த கருத்துக்கு திரையுலகினர், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அவர்களில் எச்.ராஜா, நடிகர் விவேக் ஓபராய் ஆகியோர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எச்.ராஜா பேத்தி பேர் ஜெயலலிதாவா? இன்னைக்கு டாக் ஆஃப் தி டவுன் இதுதான்!!