கமல் தனித்துப் போட்டியிட்டால் அவருக்குத் தலைவணங்குவதாக இயக்குனர் விசு தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மதுராந்தகத்தில் பள்ளி ஆண்டு விழா ஒன்றில் இயக்குனரும் நடிகருமான விசு கலந்து கொண்டார். அப்போது பேசிய விசு தனது அரசியல் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளில் தமக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஒவ்வொரு கூட்டணியிலும் என்னென்னவோ நடப்பதாக கூறிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் யார் ஜெயிக்க வேண்டும் என்பதை கடவுள் முடிவு செய்வார் என தெரிவித்தார்.
அதோடு, கமல் தனித்துப் போட்டியிட்டால் அவருக்குத் தலைவணங்குவதாகவும், எல்லா கட்சியிலும் நந்திகள் உள்ளதால் அரசியல் கட்சிகளில் இருந்து விலகி இருப்பதாகவும், தமிழக அரசியல் இப்போது படுகேவலமாக உள்ளதாகவும் விசு வேதனை தெரிவித்தார்.
நடிகராக, இயக்குனராக இருந்த விசு, ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். நீண்ட காலம் அதிமுகவில் இருந்தார். அதன் பிறகு பாஜகவில் இணைந்தார். அங்கு அவருக்கு உரிய முக்கியத்தும் இல்லை என்று வருத்தப்பட்டு இப்போது கட்சி சார்பு இல்லாமல் தனித்து செயல்பட்டு வருகிறார்.