Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாடாளுமன்ற தேர்தல்: ரஜினியின் ஆதரவை பகிரங்கமாக கேட்ட கமல்ஹாசன்!

Advertiesment
நாடாளுமன்ற தேர்தல்: ரஜினியின் ஆதரவை பகிரங்கமாக கேட்ட கமல்ஹாசன்!
, வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (18:32 IST)
ரஜினியை தனது நெருங்கிய நண்பர் என்று கமல் கூறிக்கொண்டாலும் ரஜினியை அவ்வப்போது மறைமுகமாகவும் நேரடியாகவும் விமர்சனம் செய்ய தவறுவதில்லை
 
இன்று கூட செய்தியாளர் சந்திப்பில் 'தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் கட்சிக்கு வாக்களிக்க ரஜினி கூறியது குறித்து கருத்து தெரிவித்த கமல், 'எந்த தண்ணீர் என்று அவர் சொல்லவில்லையே' என்று கிண்டலாக பதிலளித்தார்.
 
இந்த நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினியின் ஆதரவு எனக்கு இருக்கும் என நம்புகிறேன், ஆனால் ஆதரவு என்பது கேட்டு பெறவேண்டிய விஷயம் அல்ல. அவர்களே கொடுக்கவேண்டும். இப்போது வரை தனித்து போட்டியிடுவதே மக்கள் நீதி மய்யம் கட்சியின் முடிவாக உள்ளது என்று தெரிவித்தார்.
 
webdunia
மேலும் தங்கள் கட்சிக்கு மக்களின் பலம் இருப்பதாகவும், யாரோடு சேர்ந்தால் பணம் வரும் என்று நாங்கள் யோசிக்கவில்லை என்றும் கூறிய கமல், கஜா புயல் பாதிப்பின் போது பிரதமர் ஏன் தமிழகம் வரவில்லை என கேட்பது நமது உரிமை என்றும், தற்போது அவர் தமிழகம் வந்துதான் ஆகவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

38 தொகுதிகளில் போட்டி என தினகரன் அறிவிப்பு! மீதி 2 இடம் கமலுக்கா?