அரசியலில் ரஜினியை முந்துகிறாரா விஷால்?

புதன், 23 அக்டோபர் 2019 (07:51 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக கடந்த 20 ஆண்டுகளாக கூறி வந்தாலும் கடந்த 2016ஆம் ஆண்டு அவர் தான் அரசியல் கட்சியை தொடங்குவதை உறுதி செய்தார். இருப்பினும் அவர் அறிவிப்பு வெளியாகி இரண்டு வருடங்களுக்கும் மேல் ஆகியும் இன்னும் அரசியல் கட்சி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை
 
இந்த நிலையில் கோலிவுட் திரையுலக நடிகர் ஒருவரின் சார்பில் புதிய கட்சிக்கான விண்ணப்பம், டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு சென்றிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அந்த தகவல் இந்த விண்ணப்பம் ரஜினியுடைய விண்ணப்பம் இல்லை என்பதையும் உறுதி செய்துள்ளது. எனவே இந்த விண்ணப்பம் விஷாலுடையதாக இருக்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் அரசியலில் ரஜினியை முந்த விஷாலுக்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
 
நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் அரசின் தலையீடு இருப்பதை எந்த ஒரு அரசியல் கட்சியும் கண்டிக்காததால் தனக்கு என ஒரு அரசியல் கட்சி தேவை என்று விஷால் முடிவு செய்திருக்கலாம் என்றும் அவருக்கு இளம் நடிகர்கள் பலர் ஆதரவு அளிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பிரபல கிரிக்கெட் வீரர் சித்து மனைவி எடுத்த அதிரடி முடிவு