Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஷால் வேட்புமனு மீண்டும் நிராகரிப்பு! என்ன நடக்குது தேர்தல் கமிஷன்?

Advertiesment
vishal
நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற செய்தி வெளிவந்ததில் இருந்தே ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் கதிகலங்கியது. எப்படியாவது விஷாலை போட்டியில் இருந்து விலக்கி விட வேண்டும் என்பதில் இருகட்சிகளும் ஒன்றிணைந்தது.

விஷாலின் வேட்புமனு நேற்று பரிசீலனைக்கு வந்தபோது திமுகவும், அதிமுகவும் இணைந்து எதிர்ப்பு தெரிவித்ததில் இருந்தே இரு கட்சிகளின் சுயரூபம் தெரிய ஆரம்பித்தது.

இந்த நிலையில் முதலில் விஷாலின் வேட்புமனுவை நிராகரித்ததாக கூறிய தேர்தல் அதிகாரி பின்னர் அவரது வேட்புமனுவை ஏற்பதாக அறிவித்தார். இதனால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்பட்ட நிலையில் திடீரென மீண்டும் நேற்றிரவு விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் விஷால் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதுகுறித்து விஷால் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரியிடம் முறையிட முடிவு செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை கமல்-விஷால் சந்திப்பு: பிரச்சாரம் செய்வாரா?