நடிகர் சங்க நிர்வாகியாகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ள நடிகர் விஷால், நடக்கவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார்.
இதற்காக தமிழ் திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. இருப்புனும், விஷால் நேற்று தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டார். இந்நிலையில், ஒரு வேட்பாளரின் வேட்பு மனுவை 10 பேர் முன் மொழிய வேண்டும்.
இதில், விஷாலை முன் மொழியாத 2 பேரின் பெயர் இடம் பெற்றிருப்பதாக கூறி அவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் தன்னை முன்மொழிந்த இருவரை மிறட்டிதான் இந்த செயல் நடைபெற்றிருப்பதாக விஷால் ஆடியோ ஒன்றை சற்றுமுன்பு வெளியிட்டார். இதனால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த ஆடியோவில் அதிமுக-வை சேர்ந்த மதுசூதனன் ஆதரவாளர்கள்தான் இவ்வாறு செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது விஷால் அளித்த ஆதரங்களின் அடிப்படையில் அவரது வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்க்கப்பட்டது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.