Publish Date: Tue, 05 Dec 2017 (18:16 IST)
Updated Date: Tue, 05 Dec 2017 (18:18 IST)
ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குனர் சேரன் நடத்திவரும் உள்ளிருப்புப் போராட்டம் முடிவிற்கு வந்துள்ளது.
சென்னை ஆர்.கே.நகரில் விஷால் போட்டியிட்டால் ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களுக்கும் அரசால் ஆபத்து ஏற்படும் என்றும், இதனால் விஷால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பின்னர் தேர்தலில் நிற்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து கடந்த இரண்டு நாட்களாக தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், ஒரு வேட்பாளரின் வேட்பு மனுவை 10 பேர் முன் மொழிய வேண்டும். இதில், விஷாலை முன் மொழியாத 2 பேரின் பெயர் இடம் பெற்றிருப்பதாக கூறி அவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தனது உள்ளிருப்புப் போராட்டத்தை சேரன் தரப்பு கை விட்டது.