Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சங்கத் தேர்தல் ரத்து; மேல்முறையீடு செய்ய விஷால் தரப்பு முடிவு

Arun Prasath
வெள்ளி, 24 ஜனவரி 2020 (18:57 IST)
கடந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மேல்முறையீடு செய்ய விஷால் தரப்பு முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணியும், ஐசரி கணேஷின் சவாமி சங்கரதாஸ் அணியும் மோதின. இதனை தொடர்ந்து தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ”கடந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது, மறுதேர்தல் நடத்த வேண்டும்” என உத்தரவிட்டது. இந்நிலையில் தென் இந்திய நடிகர் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து திங்கட்கிழமை மேல் முறையீடு செய்யவுள்ளதாக விஷால் தரப்பு முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.8.60 கோடி குருதிப்பணம்.. ஏமன் மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற கடைசி முயற்சி..!

முதல்வரையே தடுத்த காவலர்கள்.. சுவர் ஏறி குதித்து சென்று முதல்வர்.. செய்வதறியாது இருந்த அதிகாரிகள்..!

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்..! விளம்பரம் நடிச்சது மட்டும்தான் சாதனையா அன்பில்? - அண்ணாமலை ஆவேசம்!

அதிமுகவை மீட்போம்! ஆட்சியில் அமர்வோம்! மீதி முடிவுகள் மதுரை மாநாட்டில்..! - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments