Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போலீஸ் ஸ்டேசனுக்கு திடீர் விசிட் அடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!வைரல் வீடியோ

mk stalin
, வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (19:33 IST)
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு  நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அசோக் நகரில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.அதன்பின்னர், பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு சோதனை செய்து, செயல்யல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இதுகுறித்து அவர் தன்  டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, நம் மாநிலம் அமைதிப்பூங்காவாகத் திகழ இரவுபகல் பாராமல் உழைக்கும் காவல்துறை நண்பர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இன்று பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கிருந்த காவலர்களுடன் உரையாடினேன். பெண் காவலர்கள் பலரும் பொறுப்புணர்வோடும் அர்ப்பணிப்புடனும் கடமையாற்றுவதைக் கண்டு கூடுதல் மகிழ்ச்சியடைந்தேன்.

காவல்நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை இன்முகத்துடன் வரவேற்று, அவர்களைக் கனிவுடன் நடத்தி உதவிட 912 காவல் நிலைய வரவேற்பாளர்கள, தகவல் பதிவு உதவியாளர்களுக்குக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணி நியமன ஆணைகளை வழங்கியிருந்தேன். அந்த வகையில், வரவேற்பாளர் பகுதிக்குச் சென்று அதன் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தேன்.

தமிழ்நாடு காவல்துறை எந்நாளும் பொதுமக்களின் நண்பன் எனச் சொல்லும் வகையில் பணியாற்றி அரசுக்கு நற்பெயர் பெற்றுத்தர வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறையில் இருக்க வேண்டியவர் சிறைத்துறைக்கு அமைச்சராக இருப்பதா? அண்ணாமலை ஆவேசம்..!