Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காசு கொடுத்தால் பெட்ரோல் குண்டு வீசும் வினோத்! – போலீஸார் தகவல்!

Tamilnadu
Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (11:24 IST)
சென்னை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வினோத் காசுக்கு வேலை செய்பவர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக பாஜக கட்சியின் தலைமை அலுவலகம் சென்னை தி நகரில் கமலாலயம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. நேற்று நள்ளிரவு நேரத்தில் 3 மதுபாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி மர்ம நபர் கமலாலயம் மீது வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து வினோத் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வினோத் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வினோத் காசு வாங்கி கொண்டு பெட்ரோல் வீசும் நபர் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த 2015ம் ஆண்டில் டாஸ்மாக் மீதும், 2017ம் ஆண்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்திலும் பெட்ரோல் குண்டுகள் வீசிய வழக்குகளில் வினோத் முன்னதாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது பாஜக அலுவலகம் மீது குண்டு வீச யாரேனும் சொன்னார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments