Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கண்ணெதிரே களவு போன சைக்கிள்; துரத்தி சென்ற சிறுவன்! – தனிப்படை செய்த உதவி!

Advertiesment
கண்ணெதிரே களவு போன சைக்கிள்; துரத்தி சென்ற சிறுவன்! – தனிப்படை செய்த உதவி!
, வியாழன், 10 பிப்ரவரி 2022 (09:13 IST)
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சிறுவனின் சைக்கிளை திருடி சென்ற திருடனை தனிப்படை போலீஸ் பிடித்துள்ளனர்.

சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சிறுவன் க்ரிஷ் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். சம்பவத்தன்று சிறுவன் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் விளையாடி கொண்டிருந்துள்ளான். அப்போது அவனது சைக்கிளை மர்ம நபர் ஒருவர் எடுத்து ஓட்டி செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்து துரத்தி சென்றுள்ளான்.

ஆனால் அந்த திருடன் சைக்கிளுடன் எஸ்கேப் ஆகிவிட்ட நிலையில் சிறுவன் தீராத மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளான். இதுகுறித்து கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறுவனின் மனநிலை காரணமாக உடனடியாக தனிப்படை அமைத்த போலீஸார் சிசிடிவி காட்சிகளை கொண்டு மாங்காடு பகுதியை சேர்ந்த அஸ்ரர் என்ற நபரை கைது செய்து சைக்கிளை மீட்டுள்ளனர்.

தனிப்படை போலீஸார் சர்ப்ரைஸாக சிறுவனிடம் சைக்கிளை கொண்டு வந்து ஒப்படைக்கவும் சிறுவன் கிரிஷ் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளான். தனிப்படை போலீஸார் சைக்கிளை மீட்டு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இஸ்லாம் இந்தியாவில்தான் சிறுபான்மை.. ஒடுக்க வேண்டாம்! – வைரமுத்து ட்வீட்!