Publish Date: Thu, 10 Feb 2022 (08:43 IST)
Updated Date: Thu, 10 Feb 2022 (08:45 IST)
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் திடீரென தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதியன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியான நிலையில் தேர்தல் வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி 36வது வார்டில் அதிமுக சார்பில் ஜானகிராமன் என்பவர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். வாக்குசேகரிப்பு பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.