Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.! பாமக சார்பில் சி.அன்புமணி போட்டி..!!

PMK Canditate

Senthil Velan

, சனி, 15 ஜூன் 2024 (12:07 IST)
விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளராக சி.அன்புமணி போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில்  போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 
 
இதனிடையே விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் தேர்தலுக்கான  வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
 
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பாக அன்னியூர் சிவாவும்,  நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயாவும் போட்டியிடுகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடும் என்று நேற்று அண்ணாமலை அறிவித்திருந்தார்.


இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் பாமக வேட்பாளராக சி.அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளார். விக்கிரவாண்டி இடை தேர்தலில் அதிமுக இன்னும் வேட்பாளரை அறிவிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை மெட்ரோ மேம்பால தூண்களில் விளம்பர பலகை.. வருவாய் ஈட்ட புதிய திட்டம்..!