Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆனி தமிழ் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – சிம்மம்!

Monthly astro

Prasanth Karthick

, சனி, 15 ஜூன் 2024 (11:52 IST)
கிரகநிலை:
தனவாக்கு ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சூர், புதன், சுக்கிரன் என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.




கிரகமாற்றம்:

ஆனி மாதம் 12ம் தேதி (26.06.2024) புதன்கிழமை அன்று லாப ஸ்தானத்தில் இருந்து புத பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்
ஆனி மாதம் 23ம் தேதி (07.07.2024) புதன்கிழமை அன்று லாப ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்
ஆனி மாதம் 27ம் தேதி (11.07.2024) வியாழக்கிழமை அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்
ஆனி மாதம் 32ம் தேதி (16.07.2024) செவ்வாய்கிழமை அன்று லாப ஸ்தானத்தில் இருந்து சூர்ய பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்

எதிரியின் நிலை அறிந்து அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் திறமை உடைய சிம்ம ராசியினரே இந்த மாதம் எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆராய்ந்து முடிவு எடுப்பது நல்லது. காரியங்களில் தடை தாமதம் உண்டாகலாம். முயற்சிகளில் உடனடியாக பலன் காண்பது அரிது. எந்த ஒரு வேலைக்கும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். ராசியைப் பார்க்கும் சனியின் பார்வையால் வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களைக் கையாளும் போதும் கவனம் தேவை. சகோதரர்கள் வழியில் ஏதேனும் பிரச்சனை வரலாம்.

தொழில் வியாபாரம் குறிப்பாக விவசாயம், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் குறைவான லாபம் வரக் காண்பார்கள். தொழில் வியாபரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் கோபம் தூண்டக்கூடிய வகையில் இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதும் நன்மை தரும்.

பெண்களுக்கு எந்த ஒரு வேலைக்காகவும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். பயணம் செய்யும் போது கவனம் தேவை.

மாணவர்களுக்கு எதிர்கால கல்வியை பற்றி சிந்தனை மேலோங்கும். கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது வெற்றிக்கு உதவும்.

மகம்:
சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். பணம் வருவது அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்புகள் வரும். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும். மற்றவர்களின் நலனுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். கவுரவம், அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆர்டர்கள் வருவது திருப்திகரமாக இருக்கும்.

பூரம்:
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும். பெண்கள் அடுத்தவர்கள் பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள். பயணங்கள் சாதகமான பலன் தரும். பொறுப்புகள் கூடும்.

உத்திரம் 1ம் பாதம்:
சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது உங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பிரச்சனைகளை தவிர்க்க வழிவகை செய்யும். அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களிடம் உதவி கேட்டு வருபவர்களை உதாசீனப் படுத்தாதீர்கள். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் திருப்தி உண்டாகும். கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம்.
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனை வணங்க காரிய வெற்றி உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்: 28, 29
அதிர்ஷ்ட எண்கள்: 22, 23
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வியாழன், வெள்ளி; தேய்பிறை: ஞாயிறு, வெள்ளி

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆனி தமிழ் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கடகம்!