Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

Senthil Velan
சனி, 15 ஜூன் 2024 (16:34 IST)
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. தேர்தல் சுதந்திரமாக நியாயமாகும் நடைபெறாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
 
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக மௌனம் காத்து வந்தது.
 
இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.
 
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் கேட்டுள்ளதாகவும், தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ALSO READ: பத்ரிநாத் அருகே விபத்தில் சிக்கிய சுற்றுலா வேன்..! 12 பேர் பலி..!!

மேலும் மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதால் தேர்தலை புறக்கணிப்பதாகவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments