Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 2ஆம் இடம் கிடைக்குமா? சீமான் பக்கா பிளான்..!

seeman

Mahendran

, வெள்ளி, 28 ஜூன் 2024 (10:12 IST)
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என்பதால் திமுக வெற்றி பெற்றால் இரண்டாவது இடம் யாருக்கு என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 
 
பாஜக கூட்டணியில் பாமக களத்தில் இருந்தாலும், பாமக விட அதிக ஓட்டுகள் வாங்க வேண்டும் என்று சீமான் இருப்பதாக தெரிகிறது.  இதை எடுத்துதான் சமீபத்தில் கள்ளச்சாராயம் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நடத்திய போராட்டத்திற்கு சீமான் வாழ்த்து தெரிவித்ததாகவும் அதற்கு எடப்பாடி சார்பாக நன்றி தெரிவித்ததையும் பார்க்கும்போது அதிமுகவின் ஓட்டுகளை மறைமுகமாக தனது கட்சிக்கு கொண்டு வர சீமான் பிளான் போடுவதாக தெரிகிறது. 
 
அதிமுக தொண்டர்கள் கண்டிப்பாக திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள், அப்படி என்றால் அவர்கள் தனக்கு வாக்களித்தால் தான் மிக எளிதில் இரண்டாவது இடத்தை பிடித்த விட முடியும் என்று சீமான் ப்ளான் போடுவதாகவும் அதோடு தேமுதிக வாக்குகளும் கிடைத்தால் இரண்டாவது இடம் உறுதி என்றும் சீமான் எண்ணி இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
மொத்தத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக ஜெய்ப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது இடம் பாமகவா? அல்லது நாம் தமிழர் கட்சிக்கா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வலது பக்கம் ப்ரியாவுக்கு, இடது பக்கம் ஹரிதாவுக்கு..! – இதயத்தை பிரித்த மாணவனுக்கு ஆசிரியர் வைத்த ட்விஸ்ட்!