Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கிறாரா சீமான்?... ஓ அதுக்குதான் இந்த சந்திப்பா?

சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கிறாரா சீமான்?... ஓ அதுக்குதான் இந்த சந்திப்பா?

vinoth

, வெள்ளி, 21 ஜூன் 2024 (11:26 IST)
சிவகார்த்திகேயன் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு சிங்கநடை எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் சென்னையில் பூஜையோடு தொடங்கியது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

சிவகார்த்திகேயனின் மற்றொரு படமான அமரன் திரைப்படம் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த படங்களை முடித்த பின்னர் சிவகார்த்திகேயன் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் அல்லது ஏஜிஎஸ் நிறுவனம் ஆகிய நிறுவனங்களில் ஒன்று தயாரிக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அந்த படத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம். அது சம்மந்தமாகப் பேசதான் சமீபத்தில் சிவகார்த்திகேயன், சீமானை அவர் இல்லம் சென்று சந்தித்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓடிடியில் ரிலீஸானது அரண்மனை 4… எந்த தளத்தில் தெரியுமா?