கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருக்கும் விஜயதாரணி பாஜகவில் இணைய இருப்பதாகவும் பாஜகவின் சார்பில் அவர் கன்னியாகுமரி தொகுதியில் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது விஜய தாரணி விளவங்கோடு தொகுதியை கேட்ட நிலையில் காங்கிரஸில் உள்ள சிலர் அவருக்கு சீட் கொடுக்க கூடாது என்று பிரச்சனை செய்ததாக கூறப்பட்டது.
இதனை அடுத்து பாஜக விளவங்கோடு தொகுதியை தருவதாக ஆஃபர் கொடுத்த நிலையில் வேறு வழியின்றி காங்கிரஸ் அந்த தொகுதியை விஜயதாரணிக்கு கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விஜயதாரிணி விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் குமரி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கூறி இருப்பதாகவும் தெரிகிறது.
ஒருவேளை காங்கிரஸ் கட்சி அவருக்கு வாய்ப்பு கொடுக்காவிட்டால் பாஜக அந்த வாய்ப்பை அவருக்கு கொடுக்கும் என்றும் அவர் பாஜகவில் இணைவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் இது குறித்து கருத்து கூறிய விஜயதாரிணி இந்த செய்தி எனக்கே புதுமையாக உள்ளது நான் டெல்லிக்கு ஒரு வழக்கு விசயமாக வந்திருக்கிறேன் என்று கூறினார்.