Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பார்வையற்ற சினிமா பின்னணி பாடகி விஜயலட்சுமி–அனூப் திருமண நிச்சயதார்த்தம்...

Advertiesment
Vijayalakshmi
, புதன், 12 செப்டம்பர் 2018 (13:20 IST)
பார்வையற்ற சினிமா பின்னணி பாடகியான வைக்கம் விஜயலட்சுமி; பலகுரல் கலைஞர் அனூப் என்பவருக்கும் இனிதே நிச்சயதார்த்தம் நடந்தது.

 
மலையாள பட உலகில் பிரபலமான பின்னணி பாடகியாக இருப்பவர் வைக்கம் விஜயலட்சுமி.  இவர் பிருதிவிராஜ் நடித்த ஜே.சி.டேனியல் படத்தில் இடம்பெற்ற காற்றே காற்றே என்ற பாடலை பாடி தமிழ் பட உலகுக்கு வந்தார். 
 
விக்ரம் பிரபு நடித்த ‘வீர சிவாஜி’ படத்தில் பாடிய ‘சொப்பன சுந்தரி நான்தானே,  என்ற பாடல் விஜயலட்சுமியை மேலும் பிரபலப்படுத்தியது.
 
இந்த நிலையில் பலகுரல் கலைஞர் அனூப் என்பவருக்கும் விஜயலட்சுமிக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் விஜயலட்சுமியின் வீட்டில் நடந்தது. நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். விஜயலட்சுமி–அனூப் திருமணம் அடுத்த மாதம் (அக்டோபர்) 22–ந்தேதி வைக்கம் மகாதேவ கோவிலில் நடக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்ணை விட்டு ஓடி விடு ; மிரட்டிய இன்ஸ்பெக்டர் : கழுத்தை அறுத்துக்கொண்ட காதலன் (வீடியோ)